நத்தையைப் போல் நகர்ந்து கொண்டிருந்த விமானம், அடுத்த சில கணங்களிலேயே அதன் அசுர வேகத்தை எட்டிப் பிடித்தது. தரையுடனான தனது தொடர்பைத் தற்காலிகமாகத் துண்டித்துக் கொண்டு- மேகத்துடன் உறவைப் புதுப்பித்துக் கொள்ளத் துவங்கியது . "ம்ம்ம்" என்ற பெருமூச்சோடு ஆசுவாசமடைந்த அருள் சீட் பெல்டின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான். ஊர் போய் சேர்வதற்கு இன்னும் ஒரு விமானப் பயணமும், பல மணி நேர கார் பயணமும் கையிருப்பு இருப்பினும் - இந்த முதல் விமானம் பறக்க ஆரம்பித்ததும் பாதி கிணற்றைத் தாண்டிய திருப்தி அருளின் முகத்தில் பரவியது.
இருக்கையைப் பின்புறமாக நகர்த்தி, கால்களை முடிந்தவரை முன்புறமாக நீட்டிக் கொண்டான். அசதியில் வாயைப் பிளந்தவாறு தூங்கும் தன் இரண்டு குழந்தைகளின் கேசத்தை மெதுவாக வருடியவன், கண்களை இருக்க மூடி, உறங்க முயற்சித்துக் கொண்டிருக்கும் மனைவி நந்தினியின் மீது தனது நேசப் பார்வையைப் படர விட்டான். சக பயணிகள் அங்கும் இங்குமாக எழுந்து நடமாடத் தொடங்கினர். பாத்ரூம் போகலாமா?! என்று யோசித்தவன் அங்கு இரண்டு மூன்று பேர் காத்து நின்றதைக் கண்டு, அந்த எண்ணத்தைக் கை விட்டான் . "வீட்டைப் பூட்டினோமா?!" என்ற வழக்கமான சந்தேகம் அவனுள் தோன்றி மறைந்தது. தூக்கம் வர மறுத்தது எனவே முன்னிருக்கும் திரையை ஒளிரவிட்டு அதிலிருக்கும் திரைப்படங்களைத் துலாவத் தொடங்கினான். கண்கள்தான் காட்சிகளைக் கண்டதே அன்றி, அவன் மனம் வேறு சிந்தனையில் லயித்திருந்தது.
நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள், " தம்பிங்களோட கல்யாண தேதிய குறிச்சுட்டாங்களாம்...ஆவணியில தான் நாள் நல்லா இருக்காம்" என்று நந்தினி கூறிய நாளிலிருந்து பயணத்துக்குரிய ஏற்பாடுகளைச் செய்யத் துவங்கி விட்டான் அருள். ஒரு மாசத்துக்கு முன்னாடி வெச்சிருந்தா விசா-வுக்கு போகாம இருந்திருக்கலாம், குழந்தைக்களுக்கு லீவு இருந்திருக்கும் என்று தனது புலம்பல்களை நடு நடுவே கூறினாலும் காரியத்தில் கண்ணாக இருந்தான். " நீ வேணா முன்னாடி போய் கல்யாண வேலைகளை கவனிக்கிறியா?" என்ற கேள்விக்கு " ஆமா...இந்த பிள்ளைங்களை வச்சிக்கிட்டு....எங்கள கவனிக்கவே ரெண்டு பேர் வேணும்", என்று நந்தினியிடம் இருந்து விடை வரவே...அனைவரும் ஒன்றாக, திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் பொழுதே செல்ல முடிவானது (முடிந்ததது ) .
சில பல சலசலப்புக்களால் திடுக்கிட்டு விழித்தவன்...தன்னை அறியாமலே உறங்கிப் போனதை உணர்ந்தான். இரவு உணவை சிரித்த முகத்துடன் விமான சிப்பந்தி வழங்கிக் கொண்டிருந்தார். " Air Hostess"- ன்னா ஆயா வேலை பாக்குறவங்களா?!", என்று வடிவேலு ஒரு படத்தில் கூறுவது நேரம் காலம் தெரியாமல் நினைவுக்கு வர, மனதிலேயே சிரித்துக் கொண்டான். " ஏய்...நந்தினி எந்திரி...டின்னர் வந்திருச்சு", என்று மனைவியை தட்டி எழுப்பினான். விழிக்க முடியாமல் முழித்தவள்," நல்லா கனவு...ஏர்போர்ட்ல எல்லாரும் நம்மளயே ஆச்சர்யமா பாத்திட்டு இருந்தாங்க" என்று கூறி முடிந்தவரை சாப்பிட்டு, குழந்தைகளுக்காக சிலவற்றை பத்திரப் படுத்திக்கொண்டாள்.
சொந்த ஊருக்கு சென்று அம்மாவைப் பார்ப்பது, உறவினர்களுடனும் , நண்பர்களுடனும் அளவலாவது போன்ற நினைவுகள் களிப்பைக் கொடுப்பினும், சமீப காலமாக குழந்தைகளை வைத்துக் கொண்டு செல்லும் நீண்ட நேர விமானப் பயணம் மற்றும் ஊரில் இருக்கும் பல்வேறு நடைமுறை சிக்கல்களை நினைத்து மனம் அமைதி கொள்ள மறுத்தது. பிளைட் கரைக்டா போயிரனும், விசா- வுல எந்த பிரச்னையும் இருக்கக் கூடாது, கல்யாண நேரத்தில குழந்தைகளுக்கு உடம்புக்கு ஏதும் வந்திரக்கூடாது என்ற எண்ணங்களே அருளின் மனதில் மேலோங்கி இருந்தன.
ஒரு வழியாகப் பல மணி நேர விமான பயணம் முடிவுக்கு வர ..பெட்டிகளை இழுத்துக் கொண்டு விமான நிலையத்திற்கு வெளியே வந்து நின்றார்கள். நந்தினியின் தம்பிதான் பிக் - அப்பிற்கு காரோடு வருவதாக ஏற்பாடு. ஐந்து நிமிடம் கடந்திருக்கும்...டாக்ஸி வேணுமா?! என்ற கேள்விக்கு பதிலளித்து சலித்துப் போனார்கள். "எங்க அவனக் காணோம்?!" என்று ஆரம்பித்த அருளிடம், " போன் செஞ்சு பாக்கலாம்" என்றாள் நந்தினி. அருகிலிருக்கும் கடைக்குச் சென்று..."ஒரு போன் பண்ணனும்" என்று கேட்டனர். "காயின் போன் எல்லாம் இல்ல சார்...செல் போன் இல்லையா?! என்று கடைக்காரன் கேட்ட அடுத்த நொடியே அங்கிருந்தவர்கள், வேற்று கிரக வாசிகளைப் பார்ப்பது போல அவர்களை உற்று நோக்கினர். உன் கனவு பலிச்சிருச்சு போல என்று காதருகே கிசுகிசுத்த அருளை கோபத்தில் முறைத்தாள் நந்தினி. " இந்தாங்க சார்...கால் பண்ணிக்கோங்க என்று அருகிலிருந்த ஒருவர் கைப்பேசியை கொடுக்க...தேங்க்ஸ் என்று கூறி விட்டு தம்பியிடம் பேசி நிலவரத்தை விளக்கினார்கள்.
மறு நாள் விசா நேர்காணலில் போட்டோ சரியில்லை என்று அலைய விட்டார்கள். ஷாப்பிங் சென்ற இடத்தில் பாத்ரூம் போகணும், பசிக்குது, தூக்கம் வருது என்று குழந்தைகள் படுத்த பல வித வாக்கு வாதங்களுக்கும், சண்டைகளுக்கும், சமாதானகளுக்கும் இடையே சில மணி நேர கார் பயணத்தை முடித்துக் கொண்டு சொந்த ஊரை அடைந்தார்கள். அவர்களின் ராட்சஸ பெட்டிகள் ஒரு அறை முழுவதையும் விழுங்கி விட...அடுத்த அறையில் அனைவரும் சுருண்டு படுத்துக் கொண்டனர்.
அடுத்து வந்த நாட்களில் நந்தினி திருமண வேலைகளில் மும்முரமாயிருந்தாள். அருள் குழந்தைகளை அவன் அம்மாவின் துணையோடு கவனித்துக் கொண்டான். தேவையானவற்றை ஒவ்வொன்றாக பெட்டிகளில்(Luggage ) தேடி எடுப்பது பெரும் தலை வலியாக இருந்தது அருளுக்கு. இதைத்தான், "திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்றார்களோ?! என்று நினைத்துக் கொண்டான். முதல் இரு முறை நந்தினிக்கு போன் செய்து," எந்த பெட்டியில என் பேன்ட் இருக்கு?!, கோட் எங்க இருக்கு?! என்று துளைத்தெடுத்தான். பின்பு அவளே பொறுமை இழந்தவளாய்," எல்லா பெட்டியையும் திறந்து வச்சு தேடுங்க" என்று கூறி விட்டாள்.
திருமணத்திற்கு முதல் நாள், " தல சுத்துது...பட படன்னு வருது என்று ஆரம்பித்த அருளை, " ஏன்?! நல்லா தானே போயிட்டு இருந்துச்சு" என்ற முக பாவனையோடு பார்த்தாள் நந்தினி. பின் சகலையின் துணையோடு டாக்டரிடம் ஓடினான். கவலைப் படுவதற்கு ஏதுமில்லை என்று அறிந்து அனைவரும் நிம்மதி அடைந்தனர் இவ்வாறாக முதல் தம்பியின் திருமணம் நடந்து முடிந்தது. அடுத்த தம்பியின் திருமணத்திற்கு பதினைந்து நாட்கள் இடைவெளி இருந்தததால் - இடைப்பட்ட தினங்களில் அருளின் அம்மாவோடு கோயில்களுக்கு செல்வது, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்கு விஜயம் செய்வது, அவர்களின் வழக்கமான கேள்விகளுக்கு, சிரித்துக் கொண்டே பதில் கூறுவது (மழுப்புவது) என்று பொழுது மகிழ்ச்சிகரமாகத் துள்ளி ஓடிக் கரைந்தது.
ஓரிரு தினங்கள் வீட்டில் ஓய்வாக இருக்கலாம் என்று நினைக்கும் பொழுது கரண்ட் கட் (Total Off ) ஆனது. நினைத்ததைப் போலவே குழந்தைகளுக்கும் மாறி மாறி உடம்பிற்கு வந்து போனது. "இன்னைக்கு தண்ணி வராதாம், குப்பை அள்றவங்க Strike", என்று அக்கம் பக்கத்தார் பீதி கிளப்ப - அருளை நினைத்து அவனின் அம்மாவிற்கு டென்ஷன் பெருகியது. வாலு போய் கத்தி வந்த கதையாக பிரச்சனைகள் முளைத்த வண்ணம் இருந்தன. அம்மா இல்லாத போது சில பல வால்வுகளைத் திருப்பி தண்ணீரை தொட்டியில் ஏற்றுவது ராக்கெட் சயின்ஸ்- யை விட கடினமாகப் பட்டது அருளுக்கு. ஒரு சில ஆவணங்களை வாங்க அருளும் அம்மாவும் அரசு அலுவலகங்களுக்கு நடையாக நடந்து தேய்ந்தனர். அவர்களும் அருளின் வசவிற்குத் தப்பவில்லை. " உங்க அவசரத்துக்கு எல்லாம் நடக்கணும்னா...முடியுமா?! உங்கள மாதிரி ஆளுங்களால தான் இலஞ்சம் வாங்கனும்னு நெனைக்கிறாங்க " என்று நந்தினி வேறு அவள் இஷ்டத்திற்கு lecture கொடுத்து எரியும் கொள்ளியில் நெய்யை வார்த்தாள்.
வசதிக் குறைவுகள், அசதி, நினைத்த காரியங்களை நேரத்திற்கு முடிக்க இயலாமை, "வெளிநாட்டுல இருக்கீங்க இப்பிடி காசுக்கு கணக்கு பாக்குறீங்களே?!", போன்ற கேலிப்பேச்சுக்கள், முக்கியமாக தனித்து செயல்பட முடியாமல் - அனைத்திற்கும் மற்றவரின் உதவியை எதிர்பார்த்து நிற்பது போன்றவையே தன் கோபத்திற்கு காரணம் என்பதை அறியாமல் இல்லை அருள். தனது ஆற்றாமையே மற்றவர்களின் மேல் - முக்கியமாக தனது தாயிடம் கோபமாக வெளிப்படுவதை உணர்ந்த அவன் அதை தடுக்க முயன்று, தோற்றான். அடுத்த மைத்துனனின் திருமணம் முடிந்த கையோடு ஊருக்கு திரும்பும் காலமும் வந்து சேர்ந்தது. மூட்டை முடிச்சுகளோடு கிளம்ப ஆயத்தமானார்கள்.
இத்தனை களேபரங்களுக்கு இடையேயும் மகிழ்ச்சியாக இருந்த அந்த தாயின் மனம், வரப் போகும் பேரமைதியை நினைத்து நிம்மதியின்றி தவித்தது. " இங்க வந்தா நான் உன்ன திட்டிகிட்டே தான் இருப்பேன்...பேசாம இந்த சம்மர்ல ஊருக்கு வந்திடு" என்று மடியில் தலை சாய்த்து கூறும் மகனின் தலைமுடியை பாசத்தோடு வருடிக் கொண்டிருந்தாள். மறுநாள் காரின் பின்னால் கையை அசைத்தபடி, கலங்கிய கண்களுடன் தனி மரமாக விடை கொடுத்துக் கொண்டிருக்கும் தாயைப் பார்க்கப் பார்க்க அருளின் கண்களும் குளமானது . திரும்பிப் போகத்தான் வேண்டுமா?!, என்று அவனின் நாடோடி மனம் இரு தலைக் கொள்ளி எறும்பாக, நிலை கொள்ளாமல் தவித்தது. ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலுமாக...சே என்ன இந்த வாழ்கை?!, என்று தன்னையே நொந்து கொண்டான்.
அந்நிய தேசத்தில் முழுமையாக வேரூன்ற முடியாமலும், அன்னையின் தேசத்தில் இருக்கும் மூல வேர்களிருந்து தன்னை முழுவதுமாக விடுவித்து கொள்ள விருப்பம் இல்லாதவனுமாக, தடுமாறிக் கொண்டிருக்கும் கணவனின் உள்ளக் கிடக்கையை நன்கு அறிந்தவளான நந்தினி அவனைத் தேற்றும் விதமாக அவனின் தோளில் தனது கையை அழுந்தப் பதித்தாள். காரின் வேகம் பன் மடங்கு அதிகரித்து விமான நிலையத்தை நோக்கிப் பறந்தது.