சுட்டெரித்து கொண்டிருந்த சூரியன் ஏதோ நினைத்ததைப் போல...நொடிப்பொழுதில் தனது வாலைச் சுருட்டிக் கொண்டு மேகங்களின் மத்தியில் தன்னை ஒளித்துக் கொண்டது. மேகக் கூட்டங்களும் தங்களுக்குள் கலந்து பேசி, சூரியனைக் கண்டுபிடித்து விடுவது என்று முடிவெடுத்து தென்றலின் உதவியை நாடியது. இன்னும் வேகமா...இன்னும் வேகமா என்று மேகங்கள் ஆர்ப்பரிக்க கண் இமைக்கும் கணத்தில் தென்றல் பலத்த காற்றாக மாறியது.
"அடி ஆத்தி இது என்ன படக்குன்னு இம்புட்டு காத்து வீசுது " என்று தனக்குள் அங்கலாய்த்த ஜோதி அக்கா தனது அறையின் கதவை சாத்தி விட்டு...சாலையைக் கடந்து எதிர் வீட்டு மொட்டை மாடியை நோக்கி விரைந்தாள். காற்றில் கலைந்து பறந்து கொண்டிருந்த அப்பளங்களை சாக்கோடு மடித்து சிறிய மூட்டையாக மாற்றினாள். ஓட்டமும் நடையுமாக வீட்டை நோக்கி சென்றவள் தனது பக்கத்து வீட்டு வாசலில் நின்று, " ஏய் புள்ள மகேஸ்வரி...மகேஸ்வரி" என்று குரல் கொடுத்தாள்.
கெட்டிக்கார சூரியன் பிடி படாமல் தப்பி மேகக் குவியலின் ஆழத்தில் தன்னை புதைத்துக் கொண்டது. கரு மேகங்கள் வானை சூழ்ந்து...தூறல்களை மண்ணிற்கு அனுப்பியது. உள்ளிருந்து வெளிப்பட்ட மகேஸ்வரிக்கு மிஞ்சிப் போனால் பனிரெண்டு வயதிருக்கும். " அய்யய்யயோ மழை வந்துருச்சா?!" 'அப்பளம்' என்றவாறு ஓட எத்தனித்தவளை,"இந்தாடீ எடுத்துட்டு வந்துட்டேன் " என ஒரு சிறிய மூட்டையை அவள் கையில் கொடுத்தாள். " பொத்துனாப்ல எடுத்துட்டு வா...முக்காவாசி காஞ்சுருச்சு...ஒடஞ்சுரும் என்று எச்சரித்தாள். " ஏம் புள்ள...மழை வர்றது கூட தெரியாம அப்பிடி என்னடி சின்ன புள்ளைங்க கொட விளையாட்டு...நாலு காசு பாக்கணும்னா...கண்ண நாலா பக்கமும் வச்சுக்கிடனும்...ம்ம்ம் நீ எங்க" என்று பெரு மூச்செறிந்தாள்.
ஜோதி அக்காவும் மகேஸ்வரியும் 8 க்கு 10 காம்பவுண்ட் குடியிருப்பின் பக்கத்துக்கு வீட்டுவாசிகள். ஜோதி அக்காவின் கணவர் மணி மாமா காலையில் வீட்டை விட்டு கிளம்பினால் இருட்டியதற்கு பிறகு தான் வீட்டிற்கு வருவார். என்ன வேலை என்றெல்லாம் கேட்டால் உறுதியாக கூற முடியாது ஆனால் தினமும் "டைட் "-ஆகத்தான் வருவார் என்று யாரைக் கேட்டாலும் அறிந்து கொள்ளலாம். குழந்தைகள் கிடையாது. ஜோதி அக்காவின் அப்பளம் தேய்க்கும் வருமானத்தில் தான் பொழுது ஓடிக்கொண்டிருந்தது
தொப்பென்ற சத்தத்துடன் தென்னை மட்டை ஓட்டின் மேல் விழுந்தது. மங்கலாக எரிந்து கொண்டிருந்த மஞ்சள் பல்பும் அணைந்து இருட்டாக... அவ்வப்போது வெட்டிய மின்னலின் ஒளி சிறிது வெளிச்சத்தைக் காட்டி மறைந்தது. "இன்னைக்கு பொழப்பு அவ்வளவுதான் " என்று மனதில் நினைத்தவாறு அனைத்தையும் ஒருங்கச் செய்து வீட்டைக் கூட்டிப் பெருக்கினாள் ஜோதி அக்கா. குளிச்சிட்டு வந்து சமைக்க ஆரம்பிச்சா சரியா இருக்கும் என்று துணிமணிகளை வாளியில் வைத்துக் கொண்டு கிணற்றடியில் இருக்கும் மறைவை நோக்கிச் சென்றாள்.
அப்பள மூட்டையை ஓரத்தில் வைத்து விட்டு மறுபடியும் வீட்டுக்காரம்மாவின் பேத்திகளான நிதிலா, மிதிலாவுடன் விளையாடப் போகலாமா என்று யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்த மகேஸ்வரியின் நினைப்பை ஜோதி அக்காவின் இந்த சொற்கள் கலைத்தன. "திரும்ப வெளையாட ஓடிறாத புள்ள...தென்ன மட்டை விழுந்துச்சுல்ல எந்த பக்கம் ஒழுகும்னு தெரியாது. அப்பறம் அப்பளம் நனஞ்சுரும்" என்ற எச்சரிக்கையோடு "மழையோட மழையா தலைக்கு தண்ணி ஊத்திட்டு வந்துர்றேன்" என்று அறிவித்து விட்டு சென்றாள்.
மகேஸ்வரியின் அம்மா இரண்டு மூன்று இடங்களில் வீட்டு வேலை பார்க்கிறாள். வீடு திரும்பும் நேரம்தான் ஆனால் மழைக்கு எங்காவது ஒதுங்கியிருப்பாள். மகேஸ்வரியின் அப்பா இஸ்திரி தொழிலாளி. 'அயன் மாஸ்டர்" என்று எல்லோராலும் பாசமாக அழைக்கப்படுபவர். காலையில் ஏழு மணிக்கெல்லாம் குளித்து முழுகி பட்டையோடு வண்டி எடுத்துக் கொண்டு புறப்பட்டு விடுவார். மாலையிலும் அதே பக்தி சிரத்தையோடு (வடிவேலு மாதிரி இல்லாமல்) திரும்புவார். அயன் வண்டியை காம்பவுண்டில் பார்க் செய்துவிட்டு கிளம்பும் அவர் திருப்பி வரும் பொழுது "Steady " ஆகத் தோன்றினாலும் வாயைத் திறந்ததும் குட்டு வெளிப்பட்டுவிடும். போவோர் வருவோரை எல்லாம் அழைத்து வம்பு பேசி உளறிக் கொட்டுவார். மகேஸ்வரியும் அவள் அம்மாவும் அவரை வீட்டிற்கு கூட்டிச்செல்வதற்குள் படாத பாடு படுவார்கள். அவர் வருமானம் அவர் குடிக்கே வீணாவதால் மகேஸ்வரியும் பள்ளிக்குச் செல்லாமல் (படிப்பும் மண்டையில் ஏறுவேனா என்று அடம் பிடித்தது) ஜோதி அக்காவோடு அப்பளம் தேய்த்து சம்பாதிக்க ஆரம்பித்தாள்.
மழை நின்றும் தூறல் விடாமல் தூறிக் கொண்டிருந்தது. நிதிலாவும் மிதிலாவும் " என்னக்கா பண்றீங்க?! " என்றவாறு காம்பவுண்ட் பக்கம் வந்தனர். " என்னத்த பண்றது...கரண்டு இல்ல அதான் சீக்கிரமே சுடு சோறு பொங்கியாச்சு...சாப்புறீங்களா?!" என்றவளிடம் வேண்டாம் என்று தலை அசைத்துவிட்டு கையில் வைத்திருந்த சுடுகாயுடன் மகேஸ்வரியிடம் ஓடினார்கள் சகோதரிகள். குழந்தை இல்லாததாலோ என்னவோ அக்காவும் அவளது புருசனும் எப்போதும் இவர்களிடம் மிகவும் வாஞ்சையாகப் பேசுவார்கள் அதிலும் அவர்களின் தம்பி மீது அலாதி பிரியம். சில சமயம் ஜோதி அக்காவின் புளிக்குழம்பை ஆசையாகச் சாப்பிட்டு விட்டு நாக்கும் மூக்கும் சிவக்க வீட்டிற்கு ஓடுவர் இருவரும். " அடி ஆத்தி இம்புட்டு காரமாவா இருக்கு " என உச்சு கொட்டுவாள் அக்கா.
கையில் இரண்டு தூக்குவாளியுடன் அப்போது உள்ளே நுழைந்த மகேஸ்வரியின் அம்மா மழையைப் பற்றியோ, அப்பளத்தைப் பற்றியோ ஏன் மகேஸ்வரியைப் பற்றியோ கூட எதுவும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. "ராத்திரிக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்துட்டேன்" என்று பொதுவாகக் கூறிவிட்டு வாசலில் அமர்ந்தாள். மகேஸ்வரியும் அம்மாவைக் கண்டும் காணாததைப் போல விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது ஜோதி அக்காவின் கணவர் வழக்கம் போல் உள்ளே நுழைந்தான். " ஏய் நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு ஓடுங்க...கொசு ஆயுது " என்று நிதிலாவையும் மிதிலாவையும் விரட்டினாள் ஜோதி அக்கா. எதுவும் புரியாமல் மகேஸ்வரியையும் இழுத்துக் கொண்டு ஓடினர்.
மறுநாள் ஜோதி அக்கா மிகவும் சோகமாக காணப்பட்டாள். நிதிலாவின் அத்தையிடம் எதோ சொல்லி புலம்பி அழுதாள். இது அடிக்கடி நடக்கும் கதை தான். ஒரு நாள் நிதிலாவின் அத்தை, பாட்டியோடு காம்பவுண்ட் வாசிகள் அனைவரும் டூரிங் டாக்கீஸில் சினிமா பார்க்கக் சென்றிருந்தனர். பாதி படத்திலேயே ஜோதி அக்கா வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் அத்தையிடம் பேசும் போது ஒட்டு கேட்டதில் மணி மாமா குடித்துவிட்டு வீதியில் எங்கோ விழுந்து கிடந்ததாக தகவல் வரவே தான் ஜோதி அக்கா கிளம்பினார் என்று தெரிந்தது நிதிலாவிற்கு. அப்பளம்இட்டு சேர்க்கும் பணத்தையும் விட்டு வைப்பதில்லை என்றும் ," நாந்தான் முதல்ல போயி சேரப்போறேன்...நீ வேணா பாரு " என்று மூக்கை சிந்துவாள் அக்கா.
பல சமயம் ஜோதி அக்காவிற்கும் அவள் கணவருக்கும் நடக்கும் சண்டையில் ஜோதி அக்கா அழுது கொண்டே மண்ணை வாரி இறைப்பாள். சில சமயம் நிதிலாவின் பாட்டியும் சித்தப்பாவும் சண்டையை விலக்கி விடுவர். மகேஸ்வரியின் அப்பாவோ வேறு ரகம். எவ்வளவு "Full " ஆக இருந்தாலும் நிதிலாவின் வீட்டிற்கு வந்து " வீட்டுக்காரம்மா " என்று ஆரம்பித்து பேசியே கொலை செய்துவிடுவார். "இப்ப போயி தூங்குறியா?! இல்லையா என்று வசை வாங்கிவிட்டு இடத்தை காலி செய்வார். " எங்க அப்பா இப்பிடி குடிச்சிட்டே இருந்தா செத்துருவாரா?!" என்று சினிமா பார்த்து தெரிந்த உண்மையை நிதிலாவிடம் சொல்லி அழுவாள் மகேஸ்வரி. "அப்ப நீ எங்க வீட்டுக்கு வந்திடு" என்று சமாதானம் செய்வாள் சுட்டிப் பெண் மிதிலா.
அடுத்து வந்த சில வருடங்களிலேயே மணி மாமாவும், அயன் மாஸ்டரும் குடியின் கோரப் பசிக்கு, சில மாத இடைவெளியில் இரை ஆயினர். ஜோதி அக்கா அவள் சொந்த கிராமத்துக்கே திரும்பி சென்றுவிட்டார். அவரை பற்றி தகவல் எதுவும் அதற்குப் பின் தெரியவில்லை ஆனால் அவள் மறுமணம் செய்துகொண்டு சென்னைக்கு சென்று விட்டதாகவும், குழந்தைகள் பிறந்து மகிச்சியுடன் இருப்பதாகவும் ஊருக்குள் பேச்சு அடிபட்டது. நிதிலாவின் குடுபத்தினரும் தனிக்குடித்தனம் சென்று விட்டதால் மகேஸ்வரியுடன் விளையாடுவதும் நின்று போனது. மகேஸ்வரியும் அவள் அத்தைப் பையனை திருமணம் செய்து கொண்டு அம்மாவோடு வேறு வீட்டிற்கு குடி பெயர்ந்தாள்.
இப்பொழுதும் ( 25 வருடங்கள் கடந்த பிறகும்) நிதிலாவும் மிதிலாவும் ஜோதி அக்காவைப் பற்றியும் மகேஸ்வரியைப் பற்றியும் அடிக்கடி தங்களுக்குள் பேசிக் கொள்வர். கல்லூரியில் படிக்கும் பொழுது ஓரிரு முறை மகேஸ்வரியை கையில் குழந்தையோடு பார்த்ததோடு சரி பிறகு பார்க்கவில்லை. அம்மாவிடம் விசாரிக்கும் பொழுது மகேஸ்வரியின் கணவர் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்வதாகவும்...மகேஸ்வரியும் அவள் அம்மாவும் நலமாக இருப்பதாகக் கேட்டு அக மகிழ்ந்தனர் இருவரும்.
விண்வெளிக்கே பெண்கள் பயணிக்கும் இந்த யுகத்திலும் நம்மிடையே பல ஜோதி அக்காக்களும் மகேஸ்வரி அம்மாக்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது மறைக்க, மறுக்க முடியாத உண்மை. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த சாராயக்கடைகள் "டாஸ்மாக்" என்ற பெயரில் கிளை பரப்பி விருட்சமாக வேரூன்றி விட்டது. அதை எதிர்த்தும் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த மகளிர் தினத்தில் பல சாதனைப் பெண்களைப் பட்டியலிடும் நாம் இவர்களுக்கும் அதில் ஓர் இடம் ஒதுக்கலாமே!!!
(எங்கோ இருக்கும் ஜோதி அக்காவுக்கும்...மகிழ்ச்சியுடன் வாழும் மகேஸ்வரிக்கும் இந்தக் கட்டுரை சமர்ப்பணம்.)