கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன் முதல் முறையாக "Cruise Trip" குறித்து நண்பர்கள் பேசிக் கேட்டேன். அது ஏதோ அமெரிக்க குடியுரிமை உள்ளவர்கள் செல்லும் பயணம் நமக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று பெரிதாக விவரம் ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை பின் கொரோனா காலகட்டத்தில் பல சொகுசுக் கப்பல்கள் கரை ஏற முடியாமல் "Port"-ல் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததையும் அதில் பயணம் செய்தவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவதியுற்றதையும் தொலைக்காட்சியில் பார்த்தேன் அவ்வளவே எனக்கும் Cruise க்கும் உண்டான உறவு!!!
ஆனால் சமீப காலங்களில் நவம்பர், டிசம்பர் என்று குளிர் மாதங்கள் வந்தாலே "நாங்க Cruise" போறோம் "நீங்க போகலையா?" வாங்களேன் என்று பரவலான அழைப்பு. சிலர் வருடாவருடம் சென்று வருவதாகவும் 'The Best Vacation Ever" என்றும் கூறுகிறார்கள் சரி அப்படி என்ன தான் இருக்கு இந்த Cruise-ல்?! ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான் என்று முடிவெடுத்து இவ்வருட Winter Break-ல் நண்பர்களுடன் இணைத்து கொண்டோம்.
கப்பல் பயணம் என்பது தொன்று தொட்டு இருந்துவரும் பழமையான பயண முறைகளில் ஒன்று. முற்காலங்களில் புதிய நிலப்பரப்புகளையும் வளங்களையும் கண்டறிவதற்கு அரசரின் ஆணைப்படி பல்வேரு மாலுமிகளின் தலைமைகளின் மேற்கொள்ளப்பட்ட கடற் பயணங்களைக் குறித்து பாடப்புத்தகங்களில் படித்திருக்கிறோம்.
கடல் பயணம் எத்துனை கடினமானது கடற் கொள்ளையர்களின் அட்டூழியம் மற்றும் கடல் உயிரினங்களை அதன் கொழுப்பின் (Whale Oil) பொருட்டு வேட்டையாடுவதற்கு சென்று உயிரிழப்பதையும் நாடுகளுக்கு இடையே நடக்கும் கடல் சண்டைகளைக் குறித்தும் ஆங்கிலப் படங்களில் கண்டிருக்கிறோம். புதிய பறவை படத்தில் செல்வந்தர்களாக சிவாஜி சரோஜா தேவி போன்றவர்கள் மலேசியா, சிங்கப்பூர் சுற்றுப்பயணம் சொகுசுக் கப்பலில் சென்று வருவதாகக் காட்டப்பட்டிருக்கும் 😀😀
19-ம் நூற்றாண்டு மற்றும் 20-ம் நூற்றாண்டின் துவக்க காலங்களிலும் கூட பலர் படிப்பு மற்றும் தொழில் தொடர்பான வெளிநாட்டு பயணங்களை கடல் வழியே செய்து வந்தனர்.
Cruise என்று சொல்லக்கூடிய இந்த சொகுசுக் கப்பல் பயணங்கள் அமெரிக்காவில் 1970-களில் தொடங்கப்பட்டதாகக் கூகுள் தெரிவிக்கிறது. உயர்வர்க்க மக்கள் மட்டுமே செய்துவந்த இவ்வகை பயணங்கள் தற்போது உலகம் முழுவதும் உள்ள நடுத்தர வர்கங்களுக்கும் சாத்தியப்பட்டிருப்பது மகிழ்ச்சியே!!!
சரி..நாங்கள் Cruise-க்கு சென்ற கதைக்கு வருவோம். டிக்கெட் போட்டாச்சு என்றதும் அனுபவசாலிகளிடமிருந்து பல்வேறு அறிவுரைகளும் ஆலோசனைகளும் வந்த வண்ணம் இருந்தது. நாங்கள் இதுவரை வேறு எந்த Vacation-க்கும் இவ்வளவு ஷாப்பிங் செய்ததில்லை இத்துனை Luggage-களையும் சுமந்ததில்லை!! நாம Over ஆ தான் போறோமே?! என்று தோன்றினாலும் "வேணுங்க போட்டோ Shoot இருக்கு Formal Dining இருக்கு, Swimming Pool இருக்கு, Island-ல இறங்கும் போது சுத்திபாக்கணும்" என்று அறிந்தவர்கள் எங்களை ஆசுவாசப்படுத்தினர்.
நாங்களும் ஒருவழியாக மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு 7 நாள் பயணத்தை தொடங்கினோம்.
நாங்கள் எதிர்பார்த்ததை விட Cruise அனுபவம் அருமையாகவே இருந்தது முக்கியமாக குழந்தைகள் நன்கு அனுபவித்து மகிந்தனர் ஆனால் ஒரு இடத்திற்கு போவது அதன் வரலாற்றை தெரிந்து கொள்வது ம்யூசியங்களைப் பார்வை இடுவது என்று சாவகாசமாக எதையும் செய்ய முடியவில்லை சக பயணிகளும் Beach-க்கு செல்வதையே பிரதான நோக்கமாக கொண்டிருந்தனர்.
Cruse ஐ விரும்பும் பலரும் அதற்கு சொல்லும் விளக்கம் "சமையலில் இருந்து சுதந்திரம் கிடைக்கிறது, எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமாலும் (Restrictions Apply) சாப்பிடலாம், தங்களை அழகாக தயார்படுத்திக் கொண்டு நிகழ்வுகளுக்குச் செல்லலாம், குளிர் காலத்திலும் சூரியனை அனுபவிக்கலாம் மொத்தத்தில் அழுத்தம் நிறைந்த Routine Life-ல் இருந்து விடுதலை!!
நிஜமாகவா?! மனிதனால் Routine இல்லாமல் ஒவ்வொரு நாளை ஒவ்வொரு விதமாக செலவழிக்க முடியுமா? Cruise Trip-களில் வழக்கமான வாழ்க்கையிலிருந்து விடுதலை அடைகிறோமே தவிர அங்கு தங்கிய 7 நாட்களும் ஒரே Routine ஐ தான் பின்பற்றினோம்.
அனைவரும் சகட்டு மேனிக்கு உணவை வீண் செய்வதைக் காண நேர்ந்தாலும் ஒரு நல்ல விஷயம் குழந்தைகளுக்கு Soda எங்கும் கிடைக்கவில்லை, இன்டர்நெட் இல்லை அதனால் நொடிக்கொரு தரம் போனை நோக்கும் நோயிலிருந்து தற்காலிக நிவாரணம் முக்கியமாக ரீலிஸ்-ல் இருந்து!!
அனைத்து Cruise Ship-களும் Private Island ஒன்றை வாங்கி வைத்துள்ளனர் அதன் முக்கிய நோக்கமே கப்பலில் சேர்ந்த குப்பையையை அங்கு கொட்டுவதற்குத்தான் என்று சொல்கிறார்கள் அதன் அரசியல் என்ன என்று தெரியவில்லை ஆனால் நீலமயமான அதன் அழகை நாங்கள் நன்கு ரசித்தோம்.
24/7 என்று உழைத்து சோர்வடைந்த மனிதர்களுக்கு Cruise Trip ஓகே வீட்லேயே ரிலாக்ஸாய் பொழுது போக்கும் நமக்கு எதற்கு என்று தோன்றிக்கொண்டே இருந்தாலும் "களவும் கற்று மற"!!!
முடிந்தால் நீங்களும் போயிட்டு வாங்க இப்ப இதுதான் Trending 😂
பின் குறிப்பு - 7 நாளைக்கு தங்க இடமும் குடுத்து, சாப்பாடும் போட்டு அங்கங்க சுத்தி பாக்க இறக்கியும் விடுறானே இவ்வளவு Cheap ஆ எங்கயாச்சும் Vacation போக முடியுமா சொல்லுங்க?! என்று கேட்பவரகளைப் பார்த்தால் அதுவும் சரிதான் என்று தோன்றுகிறது.
No comments:
Post a Comment